web log free
March 20, 2026

இன்று முதல் புதிய விலையுடன் விற்பனையாகும் பால்மா

 இன்று முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா புதிய விலையுடன் சந்தைக்கு வெளியிடப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் புதிய விலையில் ஒரு கிலோ பால் மா 1,195 ரூபாய்க்கும் 400 கிராம் பால் மா 480 ரூபாய்க்கும் வெளியிடப்படும் என்று இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்

இதேவேளை, இன்று முதல் பால் மா பற்றாக்குறையின்றி மொத்த சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

Last modified on Monday, 11 October 2021 05:33
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd