நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இப்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உத்தரவினை அவர் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு பணித்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.