கொழும்பு நகரை சுற்றி திரியும் பலரிடம் தற்போது முககவசங்களை பார்க்க முடியவில்லை, அத்துடன் முககவசங்கள் அணிபவர்களும் முகத்திற்கு கீழே அணிவதால் விரைவில் மற்றொரு கொவிட் அலை பரவ வர வாய்ப்புள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கொழும்பின் முதன்மை மருத்துவ அதிகாரி டொக்டர் விஜயமுனி(Dr. Vijayamuni), தான் கொழும்பின் பல பகுதிகளுக்குச் சென்றதாகவும், அவர்களில் பலர் முககவசம் அணியாமல் காணப்பட்டதாகவும் கூறினார்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.. 12.03.2020 முதல் இன்றுவரை கொழும்பு நகரில் 25,833 கொவிட் தொற்று பதிவாகியுள்ளன. அதில் 1,098 பேர் கொவிட் தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
அனைத்து கொவிட் இறப்புகளில் 5% கொழும்பு நகரத்திலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்