தற்போதைய கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் (Vasan Ratnasingam) இதனைத் தெரிவித்தார்.
பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்துறை மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பான பரிந்துரைகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் கருத்துகளுக்காகப் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.