web log free
January 12, 2025

ரவுடி குழு நடத்திய கொடூர தாக்குதல்! யாழில் பதற்றம்!

யாழில் சமிபகாலமாக மர்ம நபர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் மேலும் மேலும் தாக்குதல் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

அந்தவகையில் இ.போ.ச பேருந்தில் ஏறி மர்மநபர்கள் நடத்திய தாக்குதல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (14) யாழ்.சாவகச்சேரி பகுதியில் சென்ற பேருந்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த நபர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சையாக அனுமதிக்கபட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவது,

யாழ்.சாவகச்சேரியில் இருந்து சுன்னாகம் நோக்கி சென்றுகொண்டிருந்த 775 இலக்க பேருத்தில் ஏறிய 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் பேருந்தின் நடத்துனரிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த ரவடி கும்பலை பேருந்தில் இருந்து இறக்குமாறு சாரதியும் கூறியுள்ளார். அதை கேட்காத ரவடிகள் தொடர்ந்து பேருந்து நடத்துனருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுவந்ததுடன் நடத்துனரை தாக்கியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd