கொரோனா தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (21) முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.