ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறப்பதை Sextuplets என குறிப்பிடுவார்கள்.
இலங்கையில் முதன்முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளுமே பிறந்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் தாய் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.