நாட்டில் தற்போது 200 மாணவர்களுக்கு உட்பட்ட பாடசாலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருக்கு மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பு படையினரால் இதற்கு எந்தவொரு தடையும் இருக்காது என்றும், ஆசிரியர்கள் மட்டும் குறிப்பிட்ட பாடசாலை அதிபரின் குறுந்தகவல் ஒன்றை மாத்திரம் பெற்றுக்கொள்வது போதுமானது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.