web log free
January 12, 2025

புதிய பதவிக்கு நியமிக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்ப உறவினர்

தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில்,அந்த பதவிக்கு ஜனாதிபதி செயலக சமூக ஊடக முன்னாள் தலைவர் ஷர்மிளா ராஜபக்ச(Sharmila Rajapaksa)நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷர்மிளா ராஜபக்ச ஜூன் 2020 இல் ஜனாதிபதியின் சமூக ஊடகத்தலைவராக பணியாற்றிய நிலையில்,பின்னர் அந்த பதவியினை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், ஷர்மிளா ராஜபக்சவின் நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சரவை அனுமதிக்காக 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 19ம் , 20 ம் திகதி பொது விடுமுறை என்பதனால் 21 ம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.   

Last modified on Friday, 22 October 2021 04:23
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd