இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமாவுக்கும் (Akira Sugiyama) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் (Sajith Preamadasa) இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது, கொரோனா கட்டுப்படுத்தல் திட்டம் மற்றும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசு வழங்கும் உதவிகளுக்கு தனது நன்றியை சஜித் தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக நீடித்துள்ள இருதரப்பு உறவுகளை தூதுவர் நினைவு கூர்ந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பசுமை கட்சி என்றும் அதன் மூலம் "பசுமை திட்டம்", பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் மற்றும் Project Leopard திட்டம் என்பன செயல்படுத்தப்படுத்தப்படுகின்றது.
இதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் ஜப்பானின் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில் விஷேட கவனம் செலுத்துவதாக கூறிய தூதுவர் அதற்கு நிதியுதவி அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.