புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவரணி முதலிடம் பிடித்துள்ளது.
இலங்கை பொறியியல் கல்வி நிறுவகத்தினால் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட புத்தாக்க கண்டுபிடிப்பாளர் போட்டியில் யாழ். பல்கலைக் கழக மாணவர் அணியின் கண்டுபிடிப்பு முதலிடம் பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு உள்ள புத்தாக்க ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை பலக்லைக்கழங்கங்களுக்கிடையே இலங்கை பொறியியல் கல்வி நிறுவகம் The Institution of Engineers Sri Lanka (IESL) நடாத்திய இளமாணி மாணவர் புத்தாக்கப் போட்டியில் (Undergraduate Inventor of the Year - UIY ), யாழ் பலக்லைக்கழகத்தை சேர்ந்து மாணவர் குழு ஒன்றின் உணவு கழிவுகளில் இருந்து லன்ச் சீற்றைப் பிரித்தெடுக்கும் பொறி விருதுக்கு தேர்வானது.