இலங்கையில் முதன்முறையாக, புதிய தொழில்நுட்ப முறையான முன்கூட்டி பொருத்திய கொங்கிரீட் பால பகுதிகளை பொருத்திப் பாலம் நிர்மாணிக்கும் முறைக்கமைய முன்கூட்டியே பொருத்தப்பட்ட 3279 கொங்கிரீட் பால பகுதிகளின் மீது இங்குருகொட சந்தியில் இருந்து காலி முகத்திடல் துறைமுக நகரம் வரை, துண்களின் மீது செல்லும் துறைமுக நகர நுழைவு அதிவேக நெடுஞ்சாலை வீதியின் முதலாவது முன் தயாரிக்கப்பட்ட கொன்கிரீட் பால பிரிவுகளை பொருத்தும் நிகழ்வு நேற்று (25) ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
கொழும்பு வர்த்தக நகரின் வாயில் பகுதியில் காணப்படும் கடும் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இங்குருகொட சந்தியிலிருந்து புதிய துறைமுக நகரம் வரை கோபுரங்களுக்கு மேல் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை அமைக்க நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் திட்டமிட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கோபுரங்கள் மீது கட்டப்பட்டிருப்பது இந்த வீதியின் விசேட அம்சமாகும்.
கோபுரங்களுக்கு மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் 5.3 கி.மீ. ஆகும். 4 வழிச்சாலைகளின் கீழ் நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுகிறது. . இங்குருகடே சந்தியில் தொடங்கி காலி முகத்திடல் துறைமுக நகரத்தில் முடிவடையும் இந்த வீதியை நிர்மாணிப்பதற்கு ரூ .28,002 மில்லியன் செலவாகும். நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபுரங்களில் கட்டப்பட்ட நெடுஞ்சாலை 5 நுழைவாயில்களைக் கொண்டுள்ளது. இங்குருகட நுழைவாயில், புறக்கோட்டையில் உள்ள விமலதர்ம நிறுவனத்திற்கு அருகிலுள்ள நுழைவாயில், அலுத் மாவத்தை நுழைவாயில், காலி முகத்திடலுக்கான நுழைவாயில் மற்றும் துறைமுக நகரத்தின் நுழைவாயில் ஆகியவையே அவையாகும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது துறைமுகத்திலிருந்து தடையில்லாமல் கொள்கலன் போக்குவரத்துக்கு ஒரு புதிய நுழைவு வீதியாகும். இன்குருகடே சந்திக்கு அருகே உள்ள நுழைவாயிலில், இந்த கோபுரங்களில் அமைக்கப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலை புதிய களனி பாலத்திலிருந்து வரும் வீதியுடன் இணைக்கப்படும்.
இந்த கோபுரங்களில் மீது கட்டப்படும் துறைமுக நுழைவு நெடுஞ்சாலை திட்டத்தின் காரணமாக துறைமுக வளாகத்தில் இருந்து இடிக்கப்பட்டு அகற்றப்படும் கட்டிடத்திற்கு பதிலாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் உத்தேச கடல் சார் வசதி அளித்தல் நிலையம், துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான காணியில் 17 மாடி கட்டிடம் என்பன நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச கடல் சார் வசதி அளித்தல் நிலையம் 17 மாடிகளை கொண்டதாக சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.. இதற்கு 4099 மில்லியன் ரூபா செலவாகும். நிர்மாணப் பணிகள் 24 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறைமுக சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், துறைமுகத்தில் கொள்கலன் கையாளுதல் நடவடிக்கைகளுக்கு அதிக நிலப்பிரதேசத்தை பெறவும் துறைமுக அதிகார சபை ஊழியர் தொகுதி மற்றும் துறைமுகத்தை அண்டிய ஏனைய நிறுவனங்களை ஒரு கூரையின் கீழ் கொண்டுவருவதற்காகவும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்த மிகவும் செயல்திறனான சேவையை துறைமுகத்தை பயன்படுத்துவோருக்கு வழங்கவும் துறைமுகம் தொடர்பான பிற நிறுவனங்கள் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரவும், கடதாசி பயன்பாடற்ற ஒன்லைன் அலுவலகம் ஒன்றை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்குகிறது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி மற்றும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை திட்டப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இந்த இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.