web log free
March 30, 2026

400 சொகுசு வாகனங்கள் அரசாங்க உத்தவை மீறி கொழும்பை வந்தடைந்தன!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தற்போது அந்த வாகனங்கள் சட்டத்திற்கு முரணாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்காலத்தில் அரசாங்க தடை உத்தரவுகள் மதிக்கப்படாத நிலை, அரசாங்கத்திற்கு பெரிதும் சவாலாக அமைகிறது. இதேவேளை இந்த வாகனங்களில் பெரும்பாலானவை ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இருந்து உரிம முறையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd