ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சாசனத்தின் தரப்பினர்களின் 26ஆவது மாநாடு 2021 ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்கள் தொடர்பான சாசனம் மற்றும் பரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கும். குறித்த உடன்பாடுகளை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கும். அமுல்படுத்துவதற்கும் தேவையான தீர்மானங்களை எட்டுவதற்கும் இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாநாட்டின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஐக்கிய இராச்சியம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகள் சில இணைந்து. அரசாங்கங்கள் தூய எரிசக்தி நிகழ்ச்சி நிரலுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நிலக்கரிகளிலிருந்து விடுபட்ட தூய எரிசக்தி உடன்படிக்கையை முன்மொழிவதற்குத் திட்டமிட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட அரசாங்கங்களுக்கு. சுற்றாடல் மாசடைவதைக் குறைப்பதற்கும் மற்றும் அதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறைப்பதற்கு பொறிமுறையற்ற நிலக்கரி மின் உற்பத்தி கருத்திட்டங்களுக்குப் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கும். நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படும் புதிய கருத்திட்டங்களின் கட்டுமானங்களை வருட இறுதியில் நிறுத்துவதற்குமான பொறுப்புண்டு. அதற்கமைய. குறித்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.