கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டில் கொரோனாவுக்கு எதிராக பல தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது அரசாங்கம் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டுள்ளது.
மேலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியால் முழுமையான பாதுகாப்பு அளிக்க முடியாது. இதனால் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டியது
அவசியமானதாக கருதப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.