மாகாணத்துக்கு மாகாணம் வாகனங்களின் உரிமையை மாற்றும் போதுஇ சம்பந்தப்பட்ட மாகாணத்துக்கு உரிய எழுத்துக்களுடன் புதிய இலக்கத் தகடுகளை அச்சடிப்பதால்இ அரசுக்கு வருமானம் கிடைப்பதில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால்இ அதற்குரிய நம்பர் பிளேட்களை அச்சடிக்கும் தனியார் பிரிண்டருக்கு அதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முந்நூற்று எழுபத்தாறாயிரத்து இருநூற்று முப்பத்து மூன்று வாகனங்கள் இவ்வாறு மாகாணங்களுக்கு இடையே கைமாற்றப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய நம்பர் பிளேட்களை அச்சடிக்க தனியார் பிரிண்டிங் நிறுவனத்திடம் செலுத்தப்பட்ட தொகை எழுபத்தேழு கோடியே எண்பத்து நான்கு லட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து இருநூற்று எழுபத்தி எட்டு என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும்போது மாகாண எழுத்துக்களை அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் தொடர்பான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி வரும் ஜனவரி முதல் மாகாண எழுத்துக்களை நீக்கி இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை வாகனங்களை அடையாளம் காண்பதற்காக பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அலைவரிசை ஸ்டிக்கரும் பயனற்றது எனவும் இதனால் பெரும் பணவிரயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நம்பர் பிளேட் விவகாரம் போலவேஇ இந்த ஸ்டிக்கர்களை அச்சடிப்பதன் மூலம் அச்சடிக்கும் தனியார் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் எனத் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 2019 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கான தொடர்புடைய ஸ்டிக்கர்கள் முந்நூற்று இரண்டாயிரத்து நூற்று தொண்ணூற்று இரண்டு அச்சிடப்பட்டது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் செலுத்திய தொகை ஒரு கோடி ஐம்பத்து மூன்று லட்சம் ஐம்பத்தொன்பதாயிரத்து ஐந்நூற்று முப்பத்து நான்கு ரூபாய் பண விரயம் என தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இலக்கத் தகடுகள் மற்றும் ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பமோ மனித வளமோ மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இல்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.
எனவேஇ இந்த செயல்பாடுகள் கொள்முதல் செயல்முறை மூலம் தனியார் துறைக்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறுகிறார்.