உலகெங்கிலும் மக்களை பீதியில் உறைய செய்த கொரோனாவின் அலைகளின் பாதிப்பிற்கு இலங்கை மட்டும் விதிவிலக்கல்ல.
ஏராளமான மக்கள் கொத்தனியாக உயிரிழந்தனர் இந்த கொரோனா தொற்றினால். இறுதியாக இலங்கையின் மரணவீதம் அதிகரித்தது 3வது அலை அதாவது புதுவருட கொத்தனியிலாகும்.
உலகளவில் ஆயிரக்கணக்கில் உயிர்களை காவு வாங்கிய கொரோனா மிக வீரியமாக கொந்தளிக்கிறது A30 வகை திரிபாக மாறி. இது மிக விரைவில் இலங்கையையும் தாக்கலாம் என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் தங்கள் நிலைமறந்து பண்டிகை கொண்டாட்டத்திற்காக கூட்டமாக திரளும் காட்சிகளை பார்க்கும் போது எத்தனை நாட்களுக்கு பிறகு இந்த சுதந்திரம் என்று எண்ண கூடும். இருப்பினும் நம் மனதில் எழ வேண்டியது இவ்வாறு கூட்டம் சேர்வதால் 4வது அலை உருவாக நாமே காரணமாகி விடுகிறோம் என்ற குற்ற உணர்ச்சியே!
ஊரடங்கினால் சற்றே குறைந்த கொரோனா தற்போது சற்று அதிகரிக்கின்றது. மீண்டும் கொத்தனியாக கொரோனா தொற்று அதிகரிக்க போகிறது என்பதை நம் மனங்களில் கொண்டு சாமர்த்தியமாக வாழ பழகிக்கொள்வது மக்களாகிய எமது கடமை என்பதை ஒரு போதும் மறக்கவேண்டாம்.
தீபாவளி கொண்டாட்டத்திற்கு மக்கள் கூட்டம் எங்கு பார்த்தாலும் அலைமோதுகிறது. இதன் விளைவாக கொரோனா வைரஸ் தீபாவளி கொத்தனியாக உருவெடுக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு உருவெடுத்து பரவினால் நாடு முடக்கப்படவும் வாய்பு ள்ளது அதன் பின் வரும் அனைத்து இன்னல்களுக்கும் நாம் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
மக்களின் கவனம் அரசாங்கத்தின் மேல் எந்த அளவு இருக்க வேண்டுமோ அதே அளவு தங்களின் செயற்பாடுகள் சரியானதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் உறவுகளின் இன்னல்களுக்கு நம் அலட்சியமே காரணமாகிறது.
தடுப்பூசி ஏற்றிய தைரியத்தில் இருக்கும் மக்களே! தடுப்பூசி ஒரு போதும் கொரோனா பரவலை தடுக்காது. தற்காலிக கவசமாக மட்டுமே செயற்படும். அதுவும் A30 கொரோனாவிற்கு தடுப்பூசி எல்லாம் சற்றும் கவசமாகாது என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார நடவடிக்கைகளை மனதில் நிறுத்தி நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் நிறுத்தி உங்களை நீங்களே கொரோனா தொற்றிலிருந்தது காத்துக்கொள்ளுங்கள்.