சப்ரகமுவ மாகாணத்தில் கடமை புரியும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ்மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான தமிழ் மொழி கற்பித்தல் நடவடிக்கைகள் இரத்தினபுரி புஸ்சல்ல பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ (Tigris Koppekaduwa) நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஊழியர்கள் மத்தியில் தமிழ் மொழியில் உரையாற்றினார்.