பொது இடங்களுக்கு செல்லும் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமைக்கான அட்டைய கட்டாயமாக்குவது தொடர்பான தீர்மானம் அடுத்த கோவிட் தடுப்பு செயலணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்படும் என கோவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் நூறில் ஆறு வீதமானோருக்கு இன்னும் கோவிட் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பதால், இப்படியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமற்றது என சிலர் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவது சம்பந்தமாக பல்வேறு நிலைப்பாடுகள் இருப்பதாகவும் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.