கரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இன்று (06) காலை குறித்த Hippo Spirit கப்பலானது, இலங்கையின் மேற்கு கடற்பரப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் உறுதி செய்திருந்தது.
குறித்த சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக இரு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை அரசு, உரத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்திருந்தது.
இதேவேளை, தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய உரத்தை இலங்கைக்கு அனுப்பிய சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது.