நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சர் பதவியிலிருந்தும், பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவது தொடர்பில் கடிதமொன்றை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் குறித்த கடிதத்துடன், ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
”ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவியை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கியமைக்கு நீதியமைச்சர் அலி சப்ரி தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வந்திருந்தார்.
இதேவேளை, நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியை நேரில் சந்தித்து அலி சப்ரி தனது ராஜினாமா கடிதத்தை கையளித்திருந்ததாகவும் அதனை ஏற்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துவிட்டதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.