சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதையடுத்து, சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை 1275 ரூபாவாக அதிகரிக்க சீமெந்து உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சில சிமென்ட் நிறுவனங்கள் ஒரு மூட்டை சிமென்ட் விலையை ரூ.1375 ஆக உயர்த்தியுள்ளன.
1375 ரூபாவாக விலையை அதிகரித்த சீமெந்து கம்பனிகள் 100 ரூபாவினால் விலையை குறைப்பதாக உறுதியளித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
அண்மையில் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்ட போது சீமெந்து மூட்டையின் சில்லறை விலை 1005 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.