web log free
January 12, 2025

புதிய சர்ச்சையில் சிக்கிய மெனிகே மஹே ஹிதே பாடல்

விகாரைகளில் கட்டின(கட்டின பெரஹெரா என்பது பௌத்த நடைமுறையாகும், இது மழைக்காலத்தில் துறவிகள் வீட்டிற்குள் வசிப்பதைக் குறிக்கிறது) பிங்கும' பெரஹராவின் போது பக்திப் பாடல்கள் மற்றும் சமயப் பின்னணி கொண்ட, சமய ஸ்தலத்திற்கு ஏற்ற பாடல்களை மட்டுமே பயன்படுத்துமாறு புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

மதப் பின்னணி கொண்ட பாடல்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், வேறு பிரபலமான பாடல்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அதன் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கட்டின பெரஹேராவில் சகோதர மொழி பாடலான 'மெனிகே மஹே ஹிதே' பாடல் இசைத்துக்கொண்டு சென்றமை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. சமைய நிகழ்வில் எவ்வாறு இது அனுமதிக்கப்பட்டமை குறித்து விமர்சிக்கப்பட்டது.

இந்த விமர்சனங்களையடுத்து பேராசிரியர் கபில குணவர்தன மத பின்னணியற்ற பாடல்களை இசைக்கவேண்டாம் என தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி புண்ணிய விழாக்களை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலாச்சாரம் அழியாத வண்ணம் முன்னெடுக்கப்படும் இத்தகைய நிகழ்வுகளில் முக்கிய அம்சமே கிராமிய இசை எனவும் மெனிகே மஹே ஹிதே போன்ற நவீன பாடல்கள் இசைப்பது தவறானது மற்றும் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறது எனவும் பலர் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.

Last modified on Monday, 08 November 2021 03:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd