நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக 9 ஆறுகளின் தாழ்வுப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
தெதுறு ஓயா, மஹ ஓயா, அத்தனகலு ஓயா, கலா ஓயா, களனி கங்கை, களு கங்கை, பென்தர கங்கை, கிங் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகிய ஆறுகளின் தாழ்வு பகுதியில் வாழும் மக்கள் இவ்வாறு அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் நீர்மட்டம் அதிகரிக்கும்அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.