எதிர்வரும் டிசம்பர் மாதம் பரவும் என எதிர்பார்க்கப்படுகின்ற கொவிட் 4வது அலையிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தற்போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன கோரிக்கை விடுக்கின்றார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் 4வது அலை பரவும் அபாயம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டில் தற்போது மீண்டும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொவிட் முழுமையாக இல்லாத செய்யப்பட்டதை போன்று மக்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்.
உலகமே 4வது கொவிட் அலையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கைக்கு மாத்திரம் அதிலிருந்து விடுப்பட முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.