web log free
January 12, 2025

நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட யுகதனவி ஒப்பந்தம்

யுகதனவி ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்பிக்குமாறு எதிர்க்கட்சிகான ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. 

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர்கள் இந்த கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wikramasingha), ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல (Laksman Kiriella) உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தனர்.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னரே, அது தொடர்பிலான எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என ரணில் சபையில் தெரிவித்துள்ளதுடன் அதனை விரைவில் சபையில் முன்வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) விரைவில் அதற்குரிய ஆவணங்களை முன்வைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Monday, 08 November 2021 09:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd