web log free
January 12, 2025

ரம்புக்கன பகுதியில் மண்மேடு சரிந்ததில் 3 பேர் பலி

ரம்புக்கன, தொபேமட பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவினால் 4 பேர் வீட்டினுள் சிக்கிக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மண்சரிவில் சிக்கிக் கொண்டவர்களில் மூவரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவருடைய 8 வயதுடைய மகள் மற்றும் 14 வயதுடைய உறவுக்கார சிறுமியின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவில் சிக்கிக் கொண்ட தந்தை மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Tuesday, 09 November 2021 06:23
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd