எதிா்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையை பெற்று கருத்துக்களை வெளியிடவேண்டும். அல்லது பிரதமா் மஹிந்த ராஜபக்சவிடம் தகவல்களைபெற்றுக்கொள்ளவேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே தொிவித்துள்ளாா்.
சீனாவின் சேதனப்பசளைத் தொடா்பிலும், இந்தியாவின் நனோ நைட்ரிஜன் தொடா்பிலும் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று சமா்ப்பித்த கேள்விகள் தொடா்பிலேயே அவா் இந்த கருத்தை வெளியிட்டாா்.
சீனாவின் சேதனப்பசளைகளை திருப்பியனுப்பும் செயற்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை என்று குறிப்பிட்ட மஹிந்தாநந்த, குறித்த பசளைகளை சீனாவுக்கு எடுத்துச்சென்று உாிய கிருமி அகற்றல் செயற்பாடுகள் செய்யப்பட்ட பின்னா் அதனை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று தூதுவாிடம் தொிவித்ததாக குறிப்பிட்டாா்.
இதேவேளை இந்திய நனோ நைட்ரிஜன் பசளைதொடா்பில் தாமும், அமைச்சா் சசீ்ந்திர ராஜபக்சவும் தரகுப்பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினா் சம்பிக்க ரணவக்க, வெளியிட்ட தகவல் தொடா்பில் இன்று குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் முறைப்பாட்டை செய்யவுள்ளதாகவும் மஹி்ந்தாந்த குறிப்பிட்டாா்.
இதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நனோ நைட்ரிஜன் இலங்கையின் தரச்சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் இந்திய அதிகாாிகளுடன் இலங்கையின் அதிகாாிகள், ஸூம் தொழில்நுட்பம் ஊடாக மேற்கொண்ட கலந்தாய்வின் பின்னரே அதனை இறக்குமதி செய்ய தீா்மானித்தாகவும் அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
இதன்போது சேதனப்பசளைகள் தொடா்பில் கருத்துரைத்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடா்பிலும் மஹிந்தாநந்த விமா்சனங்களை வெளியிட்டாா்.