தெனியாய − கொட்டப்பொல பகுதியில் நேற்று (09) ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியை ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 27 வயதான குறித்த ஆசிரியைக்கு, 13 வயதிலேயே அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சுகயீனம் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் எனக் கூறிய போதிலும், இவர் ஆர்ப்பாட்டத்தில் இன்று கலந்துக்கொண்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.