நாட்டின் வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப் பணம் செலுத்துகைக்கு வழங்கப்பட்ட சலுகைக் கால அவகாசம் எதிர்வரும் 14ம் திகதியுடன் பூர்த்தியாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 31ம் திகதியிலிருந்து இழைக்கப்பட்ட தவறுகளுக்கான தண்டப் பணம் செலுத்துவதற்கு இம்மாதம் 14ம் திகதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
14ம் திகதிக்குள் தண்டப் பணம் செலுத்தினால் தாமதக் கட்டணங்கள் எதனையும் செலுத்த வேண்டியதில்லை. எதிர்வரும் 14ம் திகதிக்கு பின்னர் தண்டப் பணம் செலுத்தினால் தாமதக் கட்டணம் செலுத்த நேரிடும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
நம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் இழைக்கப்பட்ட தவறுகளுக்கான அபராதத் தொகை வழமை போன்று 14 நாட்கள் தாமதக் கட்டணம் இன்றியும், 28 நாட்களுக்குள் செலுத்தினால் தாமதக் கட்டணத்துடனும் செலுத்த முடியும் எனவும், 28 நாட்கள் கடந்தால் தண்டப் பணம் செலுத்தும் படிவங்கள் பொறுப்பேற்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.