இலங்கையில் கடந்த இரு நாள்களாக பெய்து வந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, கடந்த 48 மணி நேரத்தில் அதாவது நேற்றுமுன்தினம் (8ஆம் திகதி) முதல் 10ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 288 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
களுத்துறையின் பரகொட, இரத்தினபுரி புதிய நகரம், காலியின் உடமலத்த, பாலவிய வணாத்தவில்லு, எலுவன்குளம், மன்னார் வீதி, கல்பிட்டி, உடுபத்தாவ, தாரவில்லுவ, கொடதெனியாவ, புத்தளம், குருநாகல் ஆகிய இடங்களில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.