Facebookல் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கி, தம்மை பொலிஸார் என காட்டிக் கொண்டு நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுளளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.
இம்மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள அணிவகுப்பில் சந்தேக நபரை முன் நிறுத்தும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ மேலதிக நீதவான் உத்தல சுவஹந்துருகொட உத்தரவிட்டார்.
இந்த சந்தேக நபர்கள் தம்மை பொலிஸார் எனக்கு காட்டிக்கொண்டு, பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உதவியாளர் பதவிக்கான நேர்முகப்பரீட்சைக்கு தோற்றியவர்களிடம், அவர்களின் நியமனத்திற்கான விடயங்களை விரைவாக முடித்து தருவதாக கூறி, வங்கி கணக்கில் பணம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பலருக்கு பலவிதமான மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
புத்தளத்தை சேர்ந்த ஒருவரின் மகளின் காதல் தொடர்பை நிறுத்துவதாக கூறி பணம் பெறப்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரி நீதிமன்றில் தெரிவித்தார்.
விடயங்களை கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.