அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கொழும்பு வெலிக்கடை தடுப்புச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வைத்தியரை வைத்தியசாலைக்கு ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் ரஞ்சன் ராமநாயக்கவை ஆஜர்படுத்துமாறு வைத்தியர்கள் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க இதற்கு முன்னர் இதே முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.