web log free
January 12, 2025

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்வைத்த வரவு - செலவுத்திட்டம்!

அரச நிறுவனங்களின் தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார். 

2022ஆம் ஆண்டுக்கான வரைவு - செலவுத் திட்டத்தை (Budged) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தனது உரையில், 

* நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லை 10 வருடங்களால் நீடிக்கப்படும்.

* ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைய புதிய சம்பள அமைப்பும் முன்மொழியப்பட்டுள்ளது. பணியாளர்களை வலுப்படுத்தும் வகையில் அரச சேவையில் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பாடசாலை மாணவர்களுக்கு அதிவேக இணையதள வசதி.

*கொரோனா காரணமாக அனைத்து வருமான வழிமுறைகளும் தடைப்பட்டிருந்தாலும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் எங்களிடம் வாய்ப்பு. 

* சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான தளமாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளது.

* சந்தையில் சேவை மற்றும் பொருட்களின் விலைகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

* பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் போதுமானதாக இல்லை.

* இலங்கைப் பொருளாதாரத்தை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

* சர்வதேச நாணய நிதியத்துடன் நீண்ட கால வேலைத்திட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை.

* வர்த்தக நிலுவை பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு சேவைத் துறையிலிருந்து அதிக பங்களிப்பைப் பெறுவதற்கு எதிர்பார்ப்படுகின்றது.

* அதேவேளை சமுர்த்தி பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான தர்க்கரீதியான முறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd