மலசலகூடம் இல்லாத குடும்பங்களுக்கு மலசலகூடம் நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்தில் ஏற்பட்ட விசித்திரமான விதி குறித்து தென் மாகாணத்தில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு தென் மாகாணத்தில் மலசலகூட வசதியில்லாத 493 குடும்பங்களுக்கு மலசலகூடம் கட்டுவதற்கு இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் தொகை 09 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 09 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும் ஒரேயொரு மலசலகூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
கழிவறை வசதி இல்லாத 493 குடும்பங்களைச் சேர்ந்த 11,246 பேருக்கு இந்தத் தொகை ஒதுக்கப்பட்டது.
இதேவேளை, 2020ஆம் ஆண்டில் 206 பேருக்கு மலசலகூடங்கள் நிர்மாணிக்க 17 மில்லியன் ரூபா செலவிடப்பட்ட போதிலும் 27 பயனாளிகளுக்கு மாத்திரமே மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.