நேற்று (14) மேல் மாகாணத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையிலான இரண்டு மணிநேர காலப்பகுதியில் பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை பரிசீலிப்பதற்காக 451 காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
318 பேருந்து ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 505 வர்த்தக நிலையங்கள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவர்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.