துரித கதியில் சுமார் 2500 பசு மாடுகள் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கால்நடை வள இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D. B. Herath) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு பசு மாடுகளை நான்கு நிறுவனங்களினால் இறக்குமதி செய்து கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு காணிகளில் வளர்க்கப்பட தீர்மானித்துள்ளது எனவும் பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் உதவிகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.