web log free
January 12, 2025

இனப்பரம்பலை மாற்றும் திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டக்குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (15) காலை மாபெரும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, பிரதேச சபை தலைவர்களான ச.தணிகாசலம், யோகராசா, நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ம.தியாகராஜா உட்பட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வரலாற்றை திரிபுபடுத்தாதே, அதிகார இனவெறியைத் தமிழர்கள்மீது காட்டாதே, சிங்கள குடியேற்றத்தை நிறுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதேவேளை ஜனாதிபதிக்கு அனுப்பும் நிமித்தம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd