சுவர்ணவாஹினி EAP ஊடக அமைப்பை இலங்கையரும் இந்திய தொழிலதிபருமான சுபாஷ்கரன் அலிராஜா அவர்கள் வாங்கிய போது முன்னைய அரசாங்கம் ஈழப்புலிகளுக்கு நாட்டின் உடைமைகளை வழங்கியது என முன்னைய எதிர் தரப்பினர் கூறினார்கள்.
ஆனால் இந்த அரசாங்கம் சுபாஷ்கரன் அலிராஜா அவர்களை கௌரவித்து நாட்டிற்கு கொண்டு வந்து உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது. விமான படையினரின் உதவியுடன் ஹெலிகாப்டர் கொண்டு சுற்று பயணம் செய்ய வழிவகுத்தது.
நாங்கள் கூறுகிறோம் அவர் முதலீட்டாளர் என்று. முதலீட்டாளருக்கு வர்க்கம் அவசியமற்றது. இந்தியாவாக இருந்தாலும் சரி சீனாவாக இருந்தாலும் சரி முதலீட்டாளர்களுக்கு வித்தியாசம் இல்லை. அனைத்து தவறுகளும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும் என இரான் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.