ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
"இந்த தாக்குதலுக்குப் பின்னால் மேலோட்டமாகத் தோன்றுவதை விட பெரிய திட்டம் இருப்பதை நாங்கள் அதிகமாக உணர்ந்து வருகிறோம்" என்று கர்தினால் ரஞ்சித் கூறினார்.
"நாங்கள் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த தாக்குதலை அப்போது அறிந்தவர்களுக்கும், நீதி வழங்குவதாக உறுதியளித்தவர்களுக்கும் இப்போது எதுவும் தெரியவில்லை. அதைத்தான் எங்களால் தாங்க முடியவில்லை. அவர்கள்தான் இதற்கு பொறுப்பு என கொழும்பு பேராயர் தெரிவித்தார்.
எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் மேலும் கூறினார்.