இரசாயன உர இறக்குமதியை தடை செய்யும் ஏப்ரல் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து செய்யப்பட்டு இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
மக்கள் உணர்வுடன் கூடிய அரசாங்கம் என்ற ரீதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் பசுமை விவசாயம் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இரசாயன உரத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்காது என்றும் தற்போதைய கொள்கையே தொடரும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.