தனக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு விடயத்திற்கும் நீதிமன்றங்களை நாடி வழக்கு தாக்கல் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு எதிராக யாழ்ப்பாணம், கொழும்பு வவுனியா நீதிமன்றங்களின் தாக்கல் செய்யப்பட்ட 217 வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் கூட ஊழியர் ஒருவர் பணியிடத்தில் தன்னுடைய உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு ஆளுநர், குறித்த ஊழியர் இரண்டு வருட காலத்தில் ஓய்வு பெறவுள்ள நிலையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.