2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 233 LP எரிவாயு சிலிண்டர் தொடர்பான அழிவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தனியார் புலனாய்வு நிறுவனம் ஒன்றினால் தொகுக்கப்பட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இன்று (29) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
“கடந்த 6 ஆண்டுகளில் சில கேஸ் சிலிண்டர் வெடித்ததை நான் நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இந்த சில நாட்களில் வழக்கத்திற்கு மாறாக கேஸ் சிலிண்டர் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது விசாரணைகளை மேற்கொண்டு இந்த கேஸ் சிலிண்டர் வெடிப்புகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் விசாரணை நடத்தப்படுவதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்” என அலிகியவண்ண தெரிவித்தார்.