web log free
January 13, 2025

23 கிலோவுக்கும் அதிகமான வெடிப்பொருள் மீட்பு

அனுமதிப்பத்திரமின்றி பொட்டாசியம் நைட்ரேட் வெடிபொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டான – களுவாரிப்புவ பிரதேசத்தில் வைத்து 54 வயதான இச்சந்தேகநபர் கைதாகியுள்ளார்.

இந்நபரிடமிருந்து 23 கிலோவுக்கும் அதிகமான பொட்டாசியம் நைட்ரேட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd