எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.