அரசு முறை பயணமாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இந்தியா புறப்பட்டார்.
அமைச்சரை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை அடுத்த இரண்டு நாட்களில் சந்திக்க உள்ளார்.
முதலீடுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாப் பரிமாற்றங்கள் மூலம் அவர் இந்தியாவிடம் இருந்து முக்கியமான பொருளாதார உதவியைப் பெறுவார் என கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.