இந்த வாரம் நாடு முழுவதும் எரிவாயு தொடர்பான தீ மற்றும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் மாத்திரம் இவ்வாறான 16 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், நேற்றைய தினம் எரிவாயு தொடர்பான விபத்துக்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
அக்குரணை, தலவாக்கலை, யக்கலமுல்ல, பொகவந்தலாவ மற்றும் நானுஓயா பிரதேசங்களில் பல எரிவாயு விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சமையல் அறையில் எரிவாயு அடுப்பு அருகே திடீரென ஒரு வெடிப்பு. சமையலறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.