மோட்டார் சைக்கிள்களே விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு நாளில் சாலை விபத்துகளில் இறக்கும் நபர்களில் 40% பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், 30% பாதசாரிகள் மற்றும் 9% சைக்கிள் ஓட்டுபவர்கள்.
நாட்டில் 47% விபத்துக்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்கின்றன.
வீதி விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று (01) மகும்புரவில் நடைபெற்ற வைபவத்தில் இந்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
வீதி விபத்துக்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கான நஷ்டஈடு அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.