மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ஏற்பட்டுள்ள பிழையைக் கண்டறிய சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைப்பில் ஏற்பட்டுள்ள பிழை கண்டுபிடிக்கப்பட்டவுடன் சரி செய்யப்படும் என்றும் கூறினார்.