பரந்தன் உமையாள்புரத்தில் இன்று (05) மின்சார கிரைண்டரைப் பயன்படுத்தி மோட்டார் ஷெல் ஒன்றை வெட்ட முற்பட்ட போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
25 வயதுடைய இளைஞன் உமையாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் கைவிடப்பட்ட பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோட்டார் ஷெல் ஒன்றை வெட்ட முற்பட்ட போது இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற போது அருகில் இருந்த இளைஞனின் 13 வயது சகோதரனும் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டினுள் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அதேபோன்று வெட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட மேலும் பல பழைய மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.